தங்கலை பிரதேசத்தில் 30 வயதான விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் ஒருவர் வேலை தொடர்பான தகராறில் இன்று காலை ஒருவரால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிலிருந்து களப்பணிகளுக்காக சென்று கொண்டிருக்கும் போது வெலியர பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் காயப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியில் வசிக்கும் ஒருவரால் வேலை தொடர்பான பிரச்சினை காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரிய வருகிறது.

உயிரிழந்த பெண் நெத்தொல்பிட்டிய வெலியர பிரதேசத்தில் வசித்த திருமணமானவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்கல்லை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply