கம்பஹா, பல்லேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏழாம் வருட மாணவன் ஒருவனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய பின்னர் அவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 12 வயது மாணவன் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பொறுப்பில் உடுத்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாரிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

12 வயதுடைய இந்த மாணவன் பாடசாலை மைதானத்தில் உள்ள கழிவறைக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

Share.
Leave A Reply