மூளைச்சாவு அடைந்த 19 வயது பாடசாலை மாணவியொருவரின் இதயம் நுரையீரல் ,சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், எலும்பு மஜ்ஜை என்பன மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் 6 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படவுள்ளது.

மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல் என்பன கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மயக்க மருந்து நிபுணருக்கு பொருத்தப்பட்டு அவர் குணமடைந்து வருவதாக சத்திரசிகிச்சையில் கலந்துகொண்ட விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு மருத்துவ வரலாற்றில் இதயநோய் மற்றும் நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படுவது இதுவே முதல்முறை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த மூளைச்சாவு அடைந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் மற்றும் ஒரு கல்லீரல் நோயாளிக்கு மாற்றப்பட்டதுடன், அந்த மூன்று நோயாளிகளும் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த மாணவியின் எலும்பு மஜ்ஜையும் நோயாளிகளுக்கு மாற்றுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

மாணவி உயிருடன் இருக்கும் போதே வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் இரண்டு கண்களும் இலங்கை கண் மருத்துவ சங்கத்திற்கு தானமாக வழங்கப்பட்டதுடன் பார்வையற்ற இருவருக்கு எதிர்காலத்தில் உலகை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்.

நிகவெரட்டிய அம்பன்பொல பகுதியை சேர்ந்த ஏ. எச். டி. விஹகனா நுவன்மினி ஆரியசிங்க என்ற மாணவியே இவ்வாறு 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.

மூளைக்குள் ஏற்பட்ட கட்டி காரணமாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி மூளைச்சாவு அடைந்தார் .

மாணவி விஹகனா, குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவி என்பதுடன், அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கு வணிகவியல் பாடங்களில் ஆங்கில மொழி மூலம் தோற்றி பெறுபேறுகளுக்காக காத்திந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply