அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின்( சுவாட்- Swoad) தலைவரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம்(வயது 46) நேற்று நள்ளிரவு இடம் பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியானார்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது, பொலன்னறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் நேற்று(29) நள்ளிரவு 12.40 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

இதில் இரு பிள்ளைகளின் தந்தையான பரமசிங்கம் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

அருகில் இருந்த சாரதி படுகாயத்துக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இதில் கனரகவாகன சாரதி கைது செய்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தைப் போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share.
Leave A Reply