சென்னை: நீயா நானா நிகழ்ச்சியின் ஏப்ரல் 2ஆம் தேதிக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.

இந்த ப்ரோமோவில் அரங்கத்தில் அனைவர் முன்னிலையிலும் கோபிநாத் புடவை கட்டி அழகு பார்க்கிறார். அங்கிருந்த பெண் கோபிநாத்துக்கு இந்த புடவை நல்லாவே இருக்காது என்று சொல்ல, அது குறித்து சமூக வலைதளத்தில் கருத்துக்கள் குவிந்து வருகிறது.

காமெடியான தீர்ப்பு

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாகவே அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து வரும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடுநிலையான கருத்துக்களோடு கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருடைய கருத்துக்களை கேட்டு பலரும் வாய்விட்டு சிரித்து இதுவும் சரிதான் என்று பல நேரங்களில் கோபிநாத்தை பாராட்டி இருக்கிறார்கள்.

இந்த வாரம் புடவைகள் வாரம்

சில நேரங்களில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்படும்.

ஆனால் அந்த நேரத்திலும் அங்கே சமயோசிதனமாக செயல்பட்டு கோபிநாத் பல பிரச்சனைகளுக்கு கருத்து கூறியிருக்கிறார்.

ஒரு சில வாரங்கள் இந்த நிகழ்ச்சியை ஆழ்ந்த கருத்துள்ளதாக இருந்தாலும் சிலர் நேரங்களில் இந்த நிகழ்ச்சி என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக இருக்கும் அந்த மாதிரி தான் தற்போது வர இருக்கும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் வெவ்வேறு வகை சேலைகள் என்கிற தலைப்பில் ஷோ தொடங்குகிறது.

இத்தனை புடவையா

அதில் சேலை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை ஆசையாக வாங்கும் பெண்கள் என இரண்டு வகையாக போட்டியாளர்கள் பிரிந்து இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு பெண்ணிடம் கோபிநாத் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி, உங்ககிட்ட எவ்வளவு புடவை இருக்கிறது என்று கோபிநாத் கேட்க, அதற்கு அந்தப் பெண் நான் எண்ண மாட்டேன் சார்.

எண்ணுனா கண்ணு பட்டுரும். அதனால எண்ண மாட்டேன் என்று சொல்ல, ஓ என்று வியப்போடு கேட்ட, கோபிநாத் பிறகு சுமார் ரப்பா சொல்லுங்களேன் என்று சொல்ல அந்த பெண் அதற்கு சுமார் ஏழு பீரோ வச்சிருக்கேன் என்று சொன்னதும் அரங்கத்தில் இருந்து அனைவரும் வாயை பிளந்து விட்டனர்.

இப்படி சொல்லிட்டாங்களே

அடுத்து ஒரு பெண் ஃபர்ஸ்ட் நான் சேலை கட்டும் போது… சப்போஸ் நீங்க சேலை கட்டுனா எப்படி இருக்கும் என்று கேட்க? ஏம்மா என்னையே வந்ததிலிருந்து வம்புக்கு இழுக்கிறீங்க என்று கேட்க?

ஒரு மாதிரி பீலிங் இருந்து சார் என்று அந்தப் பெண் கூறி, பிறகு ரொம்ப கேவலமா இருந்து சார் என்று சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான கோபிநாத் சிரித்தபடியே ஏம்மா அதையும் சொல்லிட்டு, இதையும் சொல்ற என்று கேட்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் கோபிநாத்தின் மைண்ட் வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று தங்களுடைய மனதில் வந்தது எல்லாம் கமாண்டாக அடித்து விடுகிறார்கள்.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Neeya Naana 02-04-2023 Vijay Tv Show

 

 

Share.
Leave A Reply