சூடேறிய நிலையில்  இருந்த ரைஸ் குக்கரின் மூடியால்   தனது 16 வயது மகளின் முகத்தில் சூடுவைத்த  சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்தை வடுபசல் வத்தையில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி தனது தாயாருடன் சென்று செய்த  முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுடன் காணப்பட்ட சிறுமி நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று   முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு  பாணந்துறை போதனா  வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று  இரவு 7.45 மணியளவில் குறித்த சிறுமி சோறு சமைத்துக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அவரது  மனைவி அருகிலுள்ள  கடைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் ரைஸ் குக்கரின் மூடியை திறந்து ஏன் இவ்வளவு அரிசி சமைக்கிறீர்கள் என்று கேட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்துடன் சேர்த்து கன்னத்திலும் எரிகாயங்கள் இருந்ததால் சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தெரிவித்தார்.

Share.
Leave A Reply