தனது முன்னாள் கணவரை துண்டு துண்டாக வெட்டி கடற்கரையில் மனைவி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில், கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும், பாலியல் தொழிலாளியில் ஈடுபடும் பெண்ணொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2021-ஆம் ஆண்டு அன்று, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 18-ஆம் திகதி அன்று, ஊருக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிவிட்டு, தனது முன்னாள் காதலியை சந்திக்க, ஜெயந்தன் சென்றுள்ளார்.

அங்கு, தன்னுடன் மீண்டும் நெருங்கி பழக வேண்டும் என்று கூறி, அந்த பாலியல் தொழிலாளியிடம் தகராறு செய்துள்ளார்.

ஆத்திரம் அடைந்த அந்த பெண், ஜெயந்தனை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும், அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட் கேசில் எடுத்துக் கொண்டு, கோவளத்தில் உள்ள கடற்கரையில் புதைத்துள்ளார்.

ஊருக்கு சென்ற ஜெயந்தன், நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பாததால், செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

செல்போன் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த அவர், பொலிஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், அந்த பாலியல் தொழிலாளி தான் கொலை செய்தார் என்பதை கண்டறிந்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.

மேலும், ஜெயந்தனின் உடலை புதைப்பதற்கு உதவி செய்த அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் இரண்டு பேரையும், பொலிஸார் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply