அவ்வப்போது இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அதிலும் பிப்ரவரி மாதம் வந்து விட்டாலே காதலர்கள் குறித்தும், காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருபவர்கள் குறித்தும் ஏராளமான பதிவுகளையும், உருக்கமான பின்னணி குறித்த வீடியோக்களையும் நம்மால் பார்க்கவும் முடியும்.

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட சூழலில், அந்த மாதமே இந்த காதலர்களின் பதிவுகளால் தான் சமூக வலைத்தளங்கள் அதிகம் நிரம்பி வழியும்.

இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்று, தமிழ் காதம்பரி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதில் வீடியோவை பகிர்ந்த நபரின் மனைவி தினம் தோறும் வேலைக்கு போய்விட்டு வருவது தொடர்பான வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து அவரது மனைவி வரும் போது அதனை எடிட் செய்து அவரது மனைவியின் முகத்தில் உள்ள ரியாக்ஷன்களை அதில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தனக்காக அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடன் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தனது மனைவி குறித்து சில உருக்கமான கருத்துக்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

மிகவும் இயல்பாக நம் வாழ்நாளில் கடந்து செல்லும் விஷயங்களை மிக அழகாக தனது காதல் மனைவிக்காக அந்த நபர் வீடியோ எடுத்து எடிட் செய்து பகிர்ந்துள்ள வீடியோ தற்போது ஏராளமானோரின் லைக்குகளை அள்ளி வருவதுடன் மட்டுமில்லாமல் பலரையும் ஒரு நிமிடம் மனம் உருக வைத்து ரசிக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

Share.
Leave A Reply