p>தனது திருமண வைபவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்தார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத்துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சலேம்பூர் எனும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மணமகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணமகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வட இந்தியாவில் திருமணக் கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் வழக்கமாக உள்ளன.
எனினும், ஏனையோரை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில், கொண்டாட்டத்துக்காக துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு இந்திய சட்டங்களின்படி, சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Hathras, U.P., 2023#WomenEmpowerment #ABLANARI
Are Indians without a gun licence allowed to use guns @Uppolice @kpmaurya1 @myogiadityanath @dgpup @hathraspolice @dm_hathras ⁉️
Please investigate such incidents@NCMIndiaa @realsiff @Das1Tribikram @RajNgc @KirenRijiju pic.twitter.com/UFgJRgowWT
— Lady Of Equality 🇮🇳 (@ladyofequality) April 9, 2023