சென்னை: ஒருமாத காலமாக இழுபறியாக இருந்து வந்த பழவந்தாங்கல் கொலை சம்பவம், தற்போது சூடுபிடித்துள்ளது..

இது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன்.. சென்னை நங்கநல்லூரில் வசித்து வருகிறார்.. 29 வயதாகிறது..

இவர் சென்னை ஏர்போர்ட்டில் உள்ள தாய்லாந்து விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த மாதம் 19-ந்தேதி, விழுப்புரத்துக்கு செல்வதாக தன்னுடைய சகோதரியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்..

ஆனால், திரும்பி வரவேயில்லை.. இதனால், ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் போலீசில் புகார் தந்தார்.

ஏர்போர்ட்: அந்த புகாரின்பேரில் விசாரணை துவங்கியது.. அந்த விசாரணையில், ஜெயந்தனின் காதல் விவகாரம் வெளிவந்தது..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த செம்மாளம்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார்..

அவரை பார்க்க சென்றபோதுதான், அங்கு ஜெயந்தன் கொல்லப்பட்டதாக தெரியவந்தது.. இதனால், பாக்கியலட்சுமியை போலீசார் கைதுசெய்து விசாரித்தனர்.. அப்போது பல்வேறு தகவல்களை அவர் போலீசில் தந்துள்ளார்..

நெருக்கம்: பாக்கியலட்சுமி விபச்சாரம் செய்து வருபவராம்.. அவருடன் ஜெயந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது..

அப்போது இருவரும் நெருங்கி பழகிய நிலையில், ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.. பிறகு, கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்..

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பிரிந்து விட்டனர்.. ஆனாலும் ஜெயந்தன், பாக்கியலட்சுமியை தொடர்ந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார்.. சம்பவத்தன்றும் ஜெயந்தன், பாக்கியலட்சுமியை சந்திக்க சென்றிருக்கிறார்.. அப்போதும், ஒன்றாக சேர்ந்து வாழ அழைத்துள்ளார்..

பாக்கியலட்சுமி: இதற்கு வழக்கம்போல் பாக்கியலட்சுமி மறுக்கவும், தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாக்கியலட்சுமி அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பரான சங்கர் என்பவருக்கு விஷயத்தை சொல்லி உள்ளார்..

அப்போதுதான், இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.. சம்பவத்தன்று, சங்கரும், பாக்கியலட்சுமியும் சேர்ந்து ஜெயந்தனை கொன்றுள்ளனர்..

பின்னர் ஜெயந்தன் உடலை துண்டு, துண்டாக வெட்டி, அவைகளை மொத்தமாக போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்..

உடல்பாகங்கள்: இதில் சில உடல்பாகங்கள் எரியாமல் இருந்துள்ளன.. அவைகளை மட்டும் தனியாக எடுத்து, ஒரு பையில் மூட்டை கட்டி, கோவளம் கொண்டு சென்றுள்ளார் பாக்கியலட்சுமி.. இப்படி 2 முறை, அந்த மூட்டைகளை கோவளத்துக்கு கட்டி எடுத்து சென்றுள்ளார்..

கோவளத்தில் உள்ள கோயில் பூசாரி வேல்முருகன் என்பவர் உதவியுடன், ஜெயந்தனின் எரிந்த தலை, உடல் பாகங்களை மூட்டையில் கட்டி, அங்கிருந்த பூமிநாத கோவிலை ஒட்டிய குட்டையில் வீசி சென்றிருக்கிறார்கள்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

இதனிடையே, ஜெயந்தனின் உடல் பாகங்கள் வீசப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக பாக்கியலட்சுமியை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர்..

தீயணைப்பு துறையினரும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டனர்.. அவர்களின் உதவியுடன் போலீசார் குளத்தில் இருந்து உடல்பாகங்களை மீட்டனர்..

ஒரு பெரிய மூட்டையில் இருந்த 3 பிளாஸ்டிக் பைகள் கிடந்தன.. அவற்றுக்குள், எரிந்த நிலையில் ஜெயந்தனின் தலையும், உடல் பாகங்களும் கிடந்தன.

அவைகளை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

ஜெயந்தனின் உடல் குட்டையில் வீசப்பட்டு, 20-வது நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு உள்ளது.. இந்த கொலை சம்பவம் வெளியானதுமே, அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவளத்தில் உள்ள சாமியார் வேல்முருகனிடம், பழவந்தாங்கல் போலீசார் விசாரித்துள்ளனர்..

அப்போது சென்னைக்கு பாக்கியலட்சுமி வரும்போது தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரது அழகில் மயங்கி கொலைக்கு உதவியதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்..

இதற்கு பிறகு, சாமியார் வேல்முருகனை காணவில்லை.. சங்கரையும் காணவில்லை.. இருவரும் மாயமாகி உள்ளனர்..

ஆரம்பத்தில், பழவந்தாங்கல், பொன்னமராவதி, கோவளம் என்று 3 போலீசாரும் இந்த வழக்கை விசாரித்ததால் கொலை வழக்கு பதிவது எந்த போலீஸ் நிலையம் என்பது இழுபறியாகவே இருந்தது..

இப்போது பழவந்தாங்கல் போலீசார் ஒரு மாதத்துக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்… கைதான பாக்கியலட்சுமியிடம் விசாரணை நடந்து வந்தாலும், பாக்கியலட்சுமியின் அழகில் மயங்கிய பூசாரியையும், சங்கரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

 

Share.
Leave A Reply