இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? ரூ.1 கோடி கூட இல்லாத மம்தா பானர்ஜி..!
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து முதல்வர்களின் சொத்து மதிப்பு மற்றும் நிதி நிலை குறித்து Association for Democratic Reforms (ADR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது.
ADR அமைப்பு இந்த அறிக்கையில் இந்தியாவின் டாப் 10 பணக்கார முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 30 முதல்வர்களில் 29 பேரின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதோடு, கோடீஸ்வரர்கள் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளனர்.
ரூ.1 கோடிக்கும் குறைவான சொத்து கொண்ட ஒரே முதல்வர் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே. மேற்கு வங்க முதல்வர் தனது சொத்து 15 லட்சம் ரூபாய் மட்டுமே.
இப்போ முதலீடம் யாருக்கு..? தென்னியாந்திய மாநிலத்தின் முதல்வர்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்குமா..?
ஏடிஆர் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களையும் தனது அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் மிகவும் படித்த முதல்வர் என பெயர் பெற்றுள்ள அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உடன் எட்டு முதல்வர்கள் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள்.
இதோட தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன. சந்திரசேகர் ராவ்-ஐ தொடர்ந்து தமிழ்நாட்டு முதல்வர் முக.ஸ்டாலின் 47 வழக்குகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 38 வழக்குகளில் உடன் டாப் 3 இடத்தில் இருப்பதாக ADR அறிக்கை கூறுகிறது.
ஆந்திரப் பிரதேச முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி ரூ. 510 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 46 வயதான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர்சிபி-யின் தலைவராகவும் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராகவும் உள்ளார்.
பாஜக தலைவரும், அருணாச்சல பிரதேச முதல்வருமான பெமா காண்டு ரூ.163 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார்.
ஏடிஆர் தரவுகளின்படி பெமா காண்டு தனது தேர்தல் சொத்து விபரத்தில் எவ்விதமான கடனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தல் கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்-யின் மொத்த சொத்து மதிப்பு 63 கோடி ரூபாய். ஒடிசா முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் 15 லட்சம் ரூபாய் கடன் உடன் உள்ளாக்.,
இவர்களை தொடர்ந்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ 46 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4 வது இடத்திலும், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி 38 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5 வது இடத்திலும்,
தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் 23 கோடி சொத்து மதிப்புடன் 6வது இடத்திலும் உள்ளார்.
மேலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் 23 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 7 வது இடத்திலும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 17 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 8 வது இடத்திலும், மேகாலயா முதல்லர் கான்ராட் சங்மா 14 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9 வது இடத்திலும், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 13 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 10 வது இடத்திலும் உள்ளனர்
தொடர்புடைய செய்தியை பார்வையிடஇங்கே அழுத்தவும்: Association for Democratic Reforms (ADR)