நடிகை ஸ்ருதிஹாசன், பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் முதன்மையானவர். வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது,

தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் தமிழில் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து ‘சலார்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்கள்.

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியான வீர சிம்மா ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “ரிலேஷன்சிப் குறித்து என்ன அறிவுரை வழங்கினார்?” என்ற கேள்விக்கு “சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளாதே” என கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார் என்று ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார். மேலும் தனது ஆண் நண்பர் சாந்தனு குறித்தும் ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.

Share.
Leave A Reply