யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நயினை நாகபூசணி அம்மனின் புதிய திருவுருவச்சிலை ஒன்று நேற்றிரவு (13) வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நயினை நாகபூசணி அம்மனிற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
குறித்த சிலையானது அந்த இடத்தில் யாரால் வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை தகவல் எவையும் வெளியாகவில்லை.