நியூயார்க்: டெல்லியில் இளம் பெண் ஒருவர் பிகினி உடையில் மெட்ரோவில் பயணித்தது டிரெண்டிங் ஆன நிலையில், அதையே தூக்கிச் சாப்பிடும் வகையிலான சம்பவம் ஒன்று இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
நகர்ப்புறங்களில் இப்போது போக்குவரத்திற்கு பெஸ்டாக இருப்பது மெட்ரோ தான். சாலைகளில் அதிகரிக்கும் போக்குவரத்தில் இருந்து தப்பிக்க மெட்ரோவே சிறந்தது என்றே மக்கள் கருதுகிறார்கள்.
இந்த நபர் அந்த பெண்ணை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். நியூயார்க் மெட்ரோவை அவர் தனது பாத்ரூம் என நினைத்துவிட்டார் போல. மெட்ரோவில் சென்று கொண்டிருந்த அவர், திடீரென ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டிப் போட்டுவிட்டுக் குளிக்க ஆரம்பித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதிலும் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளுகுளுவென ஏசியில் பயணிக்கலாம் என்பது கூடுதல் போனஸ். இதுபோன்ற காரணங்களால் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
பாத்ரூம்: அந்த நபர் கையில் டிராலியுடன் டிசண்டான சர்ட் பேண்ட் உடை அணிந்து ஏறுகிறார். ஆனால், மெட்ரோ கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அந்த நபர் தனது செருப்புகள், பேன்ட் மற்றும் சட்டைகளைக் கழற்றி சீட் மேல் போட்டுவிடுகிறார்.
பின்னர் தனது டிராலியை ஓபன் செய்து அதில் இருக்கும் தண்ணீரை ஊற்றிக் குளிக்கத் தொடங்குகிறார்.
மஞ்சள் கலர் ஸ்பான்ஜை எடுத்து உடல் முழுக்க தேய்த்துக் குளிக்கத் தொடங்குகிறார். இதைப் பார்த்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஓட்டம் பிடித்துவிட்டனர்.
மெல்லக் குளித்துவிட்டு உள்ளே இருந்த துண்டை எடுத்தும் துடைத்து பின், மீண்டும் டிப்டாப்பாக தனது உடையை அணிந்து கொள்கிறார். அந்த பெட்டியில் இருந்தவர்கள் அதைப் பார்த்துச் சிரிப்பது இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மெட்ரோ ரயிலில் திடீரென ஒருவர் ஆடைகளைக் கழற்றி குளிப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் சற்று திகைத்தே போய்விட்டார்கள். அதன் பின்னர் எதுவுமே தெரியாதது போல அடுத்த ஸ்டாப்பில் மெட்ரோவில் இருந்து இறங்கிவிடுகிறார்.
சிரிப்பலை அவர் வெளியே சென்ற மறுநொடி ஒட்டுமொத்த மெட்ரோவும் சிரிப்பில் மூழ்குகிறது.
இந்த வீடியோ பேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு தரப்பினர் அவருக்கு மிகவும் “தைரியம்” என்று சொன்னாலும் கூட மற்றொரு தரப்பினர்
இது முட்டாள்தனமானது என்றே விமர்சித்து வருகின்றனர். வயதானவர்கள் ஒரு சிலர் இந்த தலைமுறையைக் கண்டால் பயமாக இருக்கிறது என்றும் கூட சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த நபர் மெட்ரோவை நனைக்காமலும் மற்றவர்களுக்கு சொந்தரவு தராமல் மிகவும் கவனமாக இருந்ததையும் சிலர் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், லைக்ஸ் மற்றும் வீடியோ டிரெண்டிங் ஆக இந்தளவுக்குச் செல்வது ஆபத்தில் முடியும் என்றும் ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர். இந்த நபரின் செயலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.