தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் பாடகர் என பன்முறை திறமை கொண்ட கங்கை அமரன் தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்ற அமைடயாளத்துடன் தமிழ் சினிமாவில் முதலில் பாடல் ஆசியரியராக அறிமுகமானவர் கங்கை அமரன். தொடர்ந்து 1979-ம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்களன், மௌனகீதங்கள், கமலின் வாழ்வே மாயம், சட்டம், ஜீவா, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு வெளியான புகைப்படம் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அதேபோல் பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் ராமராஜன் கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. விஜயகாந்த நடிப்பில் கோவில் காளை, பிரபு நடிப்பில் கும்பக்கரை தங்கையா, சின்னவர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கங்கை அமரன்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட கங்கை அமரன் முதன் முதலில் இசையமைப்பாளராக ஆன செய்தியை கேட்டு அவரை ஸ்டூடியோவை விட்டு இளையராக விரட்டியதாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகைளில், எனது நண்பர் மலேசியா வாசுதேவன் கதையில் ஒரு படம் தயாராக இருந்தது. அந்த படத்தில் அவர்தான் நாயகன். இசை யாரை போடலாம் என்று யோசிக்கும்போது இளையராஜா என்று பேசிக்கொண்டுள்ளனர்.

ஆனால் மலேசியா வாசுதேவன் இளையராஜா வேண்டாம் அவர் மிகவும் காஸ்லி. அவர் போடும் டியூன் எல்லாம் அமர்தான் (கங்கை அமரன்) கொடுக்கிறார்.

அதனால் அவரை போடுவோம் என்று சொல்லி பிக்ஸ் பண்ணிட்டு என்னிடம் வந்து சொன்னார்கள். ஆனால் எனக்கு மியூசிக் பத்தி ஒன்னுமே தெரியாது என்று சொன்னேன்.

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் ஒரு புரெடியூசர் கிடைச்சிருக்காரு வா என்று சொல்லி கூட்டிட்டு போனாங்க.

அங்க போய்ட்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இந்த விஷயம் நியூஸ் பேப்பரில் வந்துவிட்டது. கங்கை அமரன் இசையமைப்பாளர் என்ற செய்தியை அண்ணன் (இளையராஜா) பார்த்தவிட்டார்.

என்னடா இசையமைக்க போறீயாமே என்று கேட்டார். ஆமாம் அண்ணா இவங்கதான் கூட்டிட்டு போய் இப்படி பண்ணங்க என்று சொன்னேன்.

உனக்கு மியூசிக் பத்தி என்னடா தெரியும் கிட்டார தூக்கிட்டு ஓடு என்று விரட்டி அடித்தார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பிட்டேன். அதன்பிறகு அண்ணாவின் குரு ஜி.கே.வெங்கடேஷ் வந்து நீ தனியா மியூசிக் பண்ண போனப்போ என் குருப்பை விட்டு விலக்கினேனா என்று கேட்டார்.

அவன் இல்லை என்றால் அந்த படத்திற்கு வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க அதற்கு அவன் பண்ணா என்ன என்று கேட்டவுடன் தான் அண்ணா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் நன்றாக ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கோவில்காளை படம் பற்றி பேசிய கங்கை அமரன் இந்த படத்தில் தயாரிப்பாளராக நான் பெரிய பிரச்சனையை சந்தித்தேன்

நாடகத்தில் இருக்கும்போதில் இருந்தே எனக்கு கவுண்டமணியை தெரியும் பண விஷயத்தில் அவர் கராராக இருப்பார்.

ஆனாலும் கோவில்காளை படத்தில் நடித்தபோது சம்பளம் கொடுத்தால் தான் டப்பிங் பேச வருவேன் என்று சொல்லிவிட்டார். இவ்வளவு தூரம் பழகியும் இப்படியா என்று அலைந்து திரிந்து அவருக்கு பணத்தை செட்டில் பண்ணேண்.

அதன்பிறகு டப்பிங் வந்தார். அவர் டப்பிங் பேசி முடிக்கும்வரை நான் அந்த ஸ்டூடியோ பக்கமே போகவவில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் விஜயகாந்த் ஜெண்டில்மேன். எனது மனஉளைச்சலை போக்கியவரே அவர்தான். என்னை அமர வைத்துவிட்டு என் வேலைகளை அவர் செய்தார் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply