கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்கள் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் வெப்ப எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படலாம், சோர்வு மற்றும் வெயிலில் தொடர்ந்து செயல்படுவது வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், நீரேற்றத்துடன் இருக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply