சென்னை : அஞ்சலிக்கு ஜெய் செய்த நம்பிக்கை துரோகம் தான் இருவரின் பிரிவுக்கு காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அஞ்சலி, இவரின் எதார்த்தமான பேச்சும், அழகும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இவர் கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அஞ்சலி: இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்த அஞ்சலிக்கு அப்படம் நல்ல ஒரு தொடக்கமாகவே இருந்தது.

அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அஞ்சலி, அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனி என்ற ரோலில் எதார்த்தமாக நடித்து பாராட்டை பெற்றார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

அஞ்சலி, ஜெய் காதல் : சரவணன் இயக்கத்தில் உருவான எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததே இவர்களின் காதலை உறுதிச்செய்தது.

அதன்பின் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று, அனைவரும் நினைத்திருந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

பிரிந்துவிட்டனர் : இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஜெய், அஞ்சலி பிரிவுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அதில், இருவரும் காதலித்தார்கள், இருவரும் சேர்ந்து ஒரு பிளாட்டை வாங்கி அதில் இருந்தார்கள்.

ஜெய் போதைக்கு அடிமையாகி இருந்ததால், அது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை. பல முறை எடுத்து சொல்லியும் ஜெய் அதை காதில் வாங்கிக் கொள்ளாததால், அஞ்சலி டாடா காட்டிவிட்டு ஆந்திரா சென்றுவிட்டார்.

அஞ்சலிக்கு திருமணம் : இருவரின் காதல் விவகாரம் பத்திரிக்கையில் வந்து நாரிவிட்டது. அஞ்சலியே ஒரு பேட்டியில், நான் ஒருவருடன் , லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், அது சரிப்பட்டு வராததால் இருவரும் பிரிந்து விட்டோம் என்று ஜெய்யின் பெயரை சொல்லாமல் கூறியிருந்தார்.

தற்போது அஞ்சலி அப்பா, அம்மா பார்த்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அதே போல ஜெய்யும் தனது தவறை உணர்ந்து குடிபழக்கத்தை நிறுத்திவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் என்றார் பயில்வான் ரங்கநாதன்.

 இணையத் தொடரில் : நடிகை அஞ்சலி ராம்சரணுடன் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து, இணையத்தில் தொடரில் நடித்துள்ளார்.

ஜான்சி, பாஃல் போன்ற தொடரில் நடித்தார். மேலும், ஆந்தாலஜி படமான நவரசாவில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்றனும் என்ற குறும்படத்தில், படத்தில் காட்டாததை விட படு கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

Share.
Leave A Reply