ஜேர்மனியில் இடம்பெற்ற ஈழத் தமிழ் சமூகத்தினரின் நிகழ்வொன்றில் புலிக்கொடியை ஏந்தியிருந்த தமிழர் ஒருவருக்கு எதிராக ஜோ்மன் பொலிஸார் வழக் குத் தாக்கல் செய்துள்ளனர்.
பேர்லின் – டைர்கார்ட னில் உள்ள மாவட்ட நீ திமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ஜேர்மன் பொலிஸாரின் இச்செயல் ஈழத் தமிழர்கள் தங்கள் அடையாளத்தைப் பேணுவதைக் குற்றமாக்கும் செயலாகும் என ஈழத் தமிழர் கள் மக்கள் பேரவை (V-E-T-D) தெரிவித்துள்ளது.
இது ஒரு ஆபத்தான முன்னு தாரணமாக அமையலாம் என வும் ஈழத் தமிழர்கள் மக்கள் பேரவை கண்டனம் தெரிவித் துள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயங்கரவாதப் பட்டிய லின் கீழ் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னத்தை ஏந்தியிருந்த குற்றத்துக்காகவே தமிழ் நபருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளதாக ஜோ்மன் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் தமிழீழ தேசியக் கொடியையும் இங்கிலாந்து உள்துறை அலுவலகம் வேறு படுத்திக் காட்டியுள்ளது என ஈழத் தமிழர்கள் மக்கள் பேரவை வாதிடுகிறது.
அதே போன்று, கனடா போன்ற சில நாடுகளும் தமது நாட்டிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, இதே போன்ற வேறுபாட்டைக் கடைப்பிடித்தன எனவும் பேரவை தெரிவித்துள்ளது. தமிழீழ தேசியக் கொடியில் விடுதலைப் புலிகளின் பெயர் + எழுதப்படவில்லை.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியில் பெயர் பொறிக் கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் பொதுவாக தமிழீழ தேசியக் கொடி தமிழர்களின் அடையாளமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் ஈழத் தமிழர்கள் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நடைபெறும் தமிழர் இனப்படுகொலையில் இருந்து தப்பி, குறைந்த பட் சம் சுதந்திரமாகவும் சுயநிர்ணயத்துடனும் வாழ முடியும் என்ற நோக்குடன் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு தப்பியோடினர்.
இந்நிலையில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கொடி மற்றும் உரிமை ஆகியவற்றை ஜேர்மனி அங்கீகரிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் இங்கிலாந்து மற்றும் கனடாவின் வழிகாட்டுதலைப் ஜேர்மன் அரசாங்கம் பின்பற்ற வேண்டும் எனவும் ஈழத் தமிழர்கள் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கள அரசின் இனவாத மற்றும் அடக் குமுறைக் கொள்கைகளால் தமிழர்கள் ஜேர்மனிக்கு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் ஜேர்மனியில் ஈழத் தமிழர் அடையாளத்தை பேணுவதை குற்றமாக்குவது இலங்கை ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரத்தை ஆதரிப்பதாகவே அமையும் எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.