இந்தியா தனது ராணுவ மறுசீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக புதியதாக ராக்கெட் படை ஒன்றை உருவாக்க விரும்புகிறது இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சுமார் 7500 கோடி ரூபாய் செலவில் 250 PRALAY ப்ரளய் பலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது ஒரு ஏவுகணையின் விலை 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த ஏவுகணைகள் 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்க கூடியவை ஆகும்,

இந்த ஏவுகணைகளை தடுப்பது மிக கடினம் ஆகும் அவற்றால் இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றி சென்று தாக்குதல் நடத்த முடியும் என கூறப்படுகிறது.

மூன்று வெவ்வேறு விதமான அதாவது தரைக்கு மேல் உள்ள இலக்குகளுக்காக HE – High Explosive அதிக சக்திவாய்ந்த, பங்கர்களுக்காக PCB – Penetration Cum Blast ஊடுருவி தாக்கும் மற்றும் RDPS விமான தளங்கள் மற்றும் ஒடுபாதைகளை அழிக்கும் வெடிகுண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஏவுகணையின் தாக்குதல் வரம்பை மேலும் 100 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,

இந்த ஏவுகணைகளை கொண்டு இந்தியா தனது ராக்கெட் படையை உருவாக்க உள்ளதாகவும் இதன்மூலம் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு செக் வைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது உலகில் சீனா, ரஷ்யா, வடகொரியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தான் தனியாக ராக்கெட் படையை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ஈரான், ஃபிரான்ஸ், உக்ரைன் போன்ற நாடுகள் ராக்கெட் படைப்பிரிவுகளை கொண்டுள்ளன இந்தியாவும் அந்த வரிசையில் சேரும் என கருதப்படுகிறது.

 

Share.
Leave A Reply