வங்கியின் பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் (5000 ரூபா நாணயகட்டுகள்) குறைவடைந்தமை தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

2023.04.11 ஆம் திகதி நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா (5000 ரூபா நாணயகட்டுகள்) குறைவடைந்தமை கண்டறியப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது. பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும், உள்ளக கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு மத்திய வங்கி தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

Share.
Leave A Reply