குரங்குகளால் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் அவற்றை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாகக் கூறப்படுகின்றது .

அப்படியானால் பயிர் செய்கையை அழித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவைத்தான் முதலில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரி வித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல இது தொடர்பில்  மேலும் கூறுகையில், வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அந்நிய செலாவணியை நாட்டுக்கு கொண்டு வர உதவாது.

ஆனால் அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த குரங்குகள் ஏற்றுமதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.

குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருகின்றது. .

அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.

இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும்.

எனவே குரங்குகளை ஏற்றுமதி செய்ய க்கூடாது

குரங்குகளால் பயிர்கள் அழிக்கப் படுகின்றன .  அதனால் அவற்றை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாகக் கூறுகின்றார்கள்.

அப்படியானால் நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய முதலில் தீர்மானம் எடுங்கள்.

இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிக்கப்படுகின்றது உண்மைதான். எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது.

பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள் ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கேட்கத் தயாராக இல்லை.

பயிர்செய்கைகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவே முதலி டத்தில் உள்ளார். . எனவே, அவரையே முதலில் இலங்கையிலி ருந்து ஏற்றுமதி செய்யவேண்டும் என்றார்.
+

Share.
Leave A Reply