திருச்சியில் வரும் 24-ந்தேதி ஓ.பி.எஸ். அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மேடைகள் அமைக்கும் பணி நேற்று முன்தினம் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், ஜி கார்னர் மைதானத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. கொடியை அனுமதி இன்றி பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என ஈ.பி.எஸ். தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முப்பெரும் விழா நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் அ.தி.மு.க. கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் நடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ப.குமார் தலைமையில் திருச்சி மாநகர உதவி ஆணையர் சுரேஷ் குமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய வழக்கு பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply