மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை வெந்தேசிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி நிமாஷா என்ற 23 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) இரவு களுத்துறையிலிருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் கல்அச்சேன சந்தியில் நிறுத்தி மீன் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அங்கு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த லொறியொன்று இவர்கள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் யுவதி உயிரிழந்துள்ளதாகவும், இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.