பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் நக்கி கொள்ளும் போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க், அமெரிக்காவில் தொடர்ந்து பாலியல் விவகாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் சிக்கி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உடலுறவு வைத்து கொண்டதற்காக 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மேலும் ஒரு சர்ச்சை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கென்னிவிக்கில் உள்ள டெசர்ட் ஹில்ஸ் என்ற நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடந்த விநோத போட்டி தான் தற்போது பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும், கண்ணாடி திரையின் எதிரெதிர் பக்கங்களில் நின்று கொண்டு, ஒருவரை ஒருவர் நாவால் நக்குவது தான் போட்டி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாது.

மாணவர்களும் ஆசிரியர்களும் மாறி மாறி கண்ணாடியை நோக்கி ஓடிவந்து நக்கும்போது, மாணவர்கள் கூச்சலிடுவதையும் ஆரவாரம் செய்வதையும் வீடியோ காட்டுகிறது.

கடந்த மார்ச் 31 அன்று இந்த நக்கும் போட்டி நடந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. Also Read – செவ்வாய் கிரகத்தின் ‘டீமோஸ்’ நிலவை அழகாக படம் பிடித்த ‘ஹோப்’ விண்கலம்

Share.
Leave A Reply