பாதுகாப்பு படைகளின் பிரதம அதி காரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி.யால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

தென் இந்திய பெரும்கடல் பிராந்தியத்தில்  நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை கூட்டம் 2023 ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்றது.

அப்போதைய ஜனாதிபதி மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல்
மற்றும் அனுமதியின் கீழ் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதி காரி (CDS) மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கை
அரசாங்கத்தை பிரதிதிதித்துவப்படுத்தி அக்கூட்டத்தில் பங்கேற்றார் என்பதை பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகிறது.

ஹிரு தொலைக்காட்சியின் நேற்று இடம் பெற்ற (ஏப்ரல் 26) பெத்தரே விஸ்தரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்கிரம, விமல் வீரவன்ச எம்.பி.தனது நவய சங்கவுணு கதாவ? (ஒன்பது; மறைக்கப்பட்ட கதை) நூல் வெளி யீட்டு விழாவில் உரையாற்றுகையில்

2022ஆம் ஆண்டு மே 9 அன்று நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டம் அப்போதைய நிறை வேற்று ஜனாதிபதியையும் பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து படுகொலை செய்வதே என்றும் ஜெனரல்சவேந்திர சில்வாவின் இந்திய விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் குற்றம்சாட்டியிருந்தார் எனத் தெரிவித்தார்.

இதன்படி, மேற்படி கருத்து அடிப்படையற்றது எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் வலியுறுத்துவதுடன், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னான் இராணுவத் தளபதி ஜெனரல் சவேத் திரசில்வா அப்போதைய இலங்கை ஜனா திபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு உத் தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந் தார் என்பதை மேலும் வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply