நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார் . தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா.

இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒரு ரசிகர், சமந்தாவின் தீவிர பிரியர்.

இவர் ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் வசிக்கிறார். இவருக்கு திடீரென ஒரு ஆசை வந்தது. தனது அபிமான நடிகை சமந்தாவுக்காக கோயில் ஒன்றை கட்ட விரும்பினார்.

வெளியிடங்களில் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தனது வீட்டிலுள்ள வளாகத்திலேயே சமந்தாவுக்கு கோயில் கட்டும் பணிகளை தொடங்கிவிட்டார்.

இதற்காக சமந்தா உருவத்தில் சிலை ஒன்றையும் தயார் செய்துவிட்டார். சமந்தாவுக்கு நேற்று முன்தினம் பிறந்த தினம். இதையொட்டி அவருக்கான கோயிலை அந்த ரசிகர் திறந்துள்ளார்.

இதற்கு முன் தமிழகத்தில் எம்ஜிஆர், குஷ்பு, ஹன்சிகா, நிதி அகர்வாலுக்கு கோயில்கள் கட்டப்பட்டன .

வட மாநிலத்தில் சமீபத்தில் சோனு சூட்டுக்கு கோயில் கட்டப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டியிருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply