யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) வேலை செய்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வாகன திருத்தகத்தில் வேலை செய்யும் இந்நபர் மின் சாரத்தினை பயன்படுத்தி (வெல்டிங் வேர்க்) ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த வேளை மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.