ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார்.

>

ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டம், சத்ராங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் பெஹெரா. இவருக்குச் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மணமகன் ஊர்வலத்துக்கு, சொகுசு கார் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மணமகன் அதை வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

மேலும், ஒரு ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார்.

மணமகன் கங்காதர், ஜேசிபி வாகனத்தில் திருமணம் ஊர்வலத்தை நடத்தியது அந்த வட்டாரம் முழுவதும் பேசுபொருளானது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலானது

அதைத் தொடர்ந்து, இந்த ஊர்வலத்துக்குச் சொகுசு வாகனத்தைப்  பயன்படுத்தாமல் ஜேசிபி-யைப் பயன்படுத்தியது குறித்து மணமகனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “என்னுடைய சகோதரன் ஜேசிபி வாகனம் மூலம் சம்பாதிக்கிறான்.

அவனின் இந்தத் தொழில் குறித்து சில அசௌகரிய சிந்தனைகள் உறவினர்களுக்கு மத்தியில் இருந்தன. அவற்றைப் போக்கவும், என்னுடைய சகோதரனுக்கு மரியாதை செய்யவும் ஜேசிபி-யில் ஊர்வலம் செல்வது என முடிவெடுத்தேன்.

நான் நினைத்ததுபோலவே அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன” என்றார். கங்காதரின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுவருகிறது.

Share.
Leave A Reply