மஹர கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கினிகம மற்றும் அக்பர் நகர் பகுதிகளில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் முறையே கினிகம மற்றும் அக்பர் நகரைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் 80 வயதுடைய ஆண் ஆவர்.
81 வயதான பெண் எந்த தடுப்பூசியும் பெறவில்லை, மற்றவர் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டுமே பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.