அவ்வை சண்முகி படத்தில் மேக்கப் போட்ட பிறகு கமல் சாரால் சாப்பிட முடியாது; சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் சாப்பிட முடியும்; ரமேஷ் கண்ணா பிளாஷ்பேக் ஸ்டோரி

அவ்வை சண்முகி படத்தில் போட்ட மேக்கப் கமல் மாதிரி யாராலும் செய்ய முடியாது என இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் பெண் வேடமிட்டு கலக்கிய திரைப்படம் அவ்வை சண்முகி. வெற்றிகரமாக ஓடிய அந்த படத்தில் பெண் வேடமிட்டு இருக்கும்போது, அது கமல் என்று தெரியாத அளவிற்கு அவரது மேக்கப் சிறப்பானதாக இருக்கும்.

 

இந்தநிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணா, அவ்வை சண்முகி படத்தில் மேக்கப்புக்காக கமலஹாசன் பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அந்த வீடியோவில், அவ்வை சண்முகி படத்தில் போட்ட மேக்கப் கமல் மாதிரி யாராலும் செய்ய முடியாது.

இப்ப சொன்ன அவரால் கூட முடியாது. மகாபலிபுரம் அருகே சூட்டிங் நடந்தது. காலையில் 5 மணிக்கு சூட்டிங்க்கு வர வேண்டும். அந்த மேக்கப் போட கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகும். சூட்டிங் 9 மணியிலிருந்து 2 மணி வரை நடக்கும். 2 மணிக்கு மேல் மேக்கப் உறிய ஆரம்பிச்சிரும்.

5 மணிக்கு மேக்கப் போட ஆரம்பிக்கனும்னா கமல் 4 மணிக்கு அங்கு வரணும். அதுக்கு அவர் 3 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து கிளம்பனும். அதைவிட அவர் 2 மணிக்கு எந்திரிச்சு கை, கால் எல்லாம் சேவ் பண்ணனும்.

இப்படி 55 நாள் வந்து நடிச்சார் கமல். இதுமாதிரி யாரும் செய்ய முடியாது. காலையில் 4 மணிக்கு வேகவேகமாக சாப்பிடுவார்.

அதுக்கு அப்புறம் 2 மணிக்கு சூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் சாப்பிட முடியும். சாப்பிட்டா அசைவுகளால் மேக்கப் கலைஞ்சிரும்னு, ஜூஸ் மட்டும் தான் குடிச்சிக்குவாரு.

மேக்கப் கலையாம இருக்க ஏ.சி.,யிலே இருக்கணும். அப்போ கேரவன் கிடையாது. மரப்பெட்டி மாதிரி ஒரு ரூம்ல ஏ.சி வச்சிருப்பாங்க. ஷாட் முடிஞ்சதும் அங்க போய் உட்கார்ந்துருவாரு. ஏ.சி காத்து அடிச்சுக்கிட்டே இருக்கும்.

பார்க்க பரிதாபமா இருக்கும். 2 மணிக்கு மேல மேக்கப் கலைச்சிட்டு தான் சாப்பிடுவாரு. நாங்களும் அப்பதான் சாப்பிடுவோம்.

அதுதான் முடிஞ்சிருச்சுனு பார்த்தா, இப்ப தசாவதாரத்தில் எத்தனை மேக்கப். அவர் மாதிரி டெடிக்கேசனா யாரும் வேலை பார்க்க முடியாது. இவ்வாறு அந்த வீடியோவில் ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.

Share.
Leave A Reply