♠ ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.

♠ 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது. இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்கள், ஹெயின்ரிச் கிளாசன் 26 ரன்களும்,

கிளென் பிலிப்ஸ் 25 ரன்களும், அப்துல் சமாத் 11 ரன்களும் எய்டன் மார்க்ரம் 6 ரன்களும், மார்கோ ஜான்சன் 3 ரன்களும எடுத்தனர்.

அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர். இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply