ஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. இவர்களில் பெரும்பலானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

எனினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என ஐநா தெரிவித்துள்ளது.

இவ்வருடம் வாராந்தம் சரராசரியாக 10 பேரை ஈராக் துக்கிலிடுகிறது என  மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர்  என வோல்கர் துர்க் தெரிவித்துள்ளார்.

இந்த வீதத்தில் நோக்கினால் கடந்த வருடம் சென்ற பாதையில் கவலைக்குரிய வகையில் ஈரான் செல்கிறது. கடந்த வருடம் 580 பேர் தூக்கிலிடப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, சுவீடிஷ் – ஈரானியர் ஒருவரை பயங்கரவாத குற்றச்சாட்டில் ஈரான் தூக்கிலிட்டது.  சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

நேற்று திங்கட்கிழமை இறைநிந்தனை குற்றச்சாட்டில் இருவர் தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த 14 நாட்களில் குறைந்தபட்சம் 45 பேர் தூக்கிலிடப்பட்டனர் எனவும், இவர்களில் 22 பேர் சிறுபான்மை பலோச் இனத்தவர்கள் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply