முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (14) சிலரால் கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹூரிகஸ்வேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹூரிகஸ்வேவ முதுன்கொட பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதான துசித குமார என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் முதுன்கொட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த இருவர் விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply