பௌத்த பிக்குவான தனது கள்ளக் காதலனுக்கு தனது மகளை தாரைவார்த்த தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மொரட்டுவை உள்ள விகாரையை சேர்ந்த 65 வயதுடைய பௌத்த பிக்குவை 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் கோசல சேனாதீர உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இச்சிறுமியின் தந்தை சிறுவர், மகளிர் பாதுகாப்புப் பிரிவுக்கு முறையிட்டதையடுத்து, மொரட்டுவை பிக்கு மற்றும் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் தாயுடன் தகாத உறவில் உள்ள இந்த பிக்கு கடந்த வாரம் கல்கிசையில் உள்ள ஹோட்டலுக்கு சிறுமியையும் தாயையும் அழைத்துச்சென்றுள்ளார்.

தாய் அந்த ஹோட்டலில் உள்ள அறையில் மயக்கமுற்றதாகவும் அதன் பின்னர் சிறுமியை பிக்கு, வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இந்த சம்பவத்தை யாரிடம் சொல்ல வேண்டாம் எனவும் பிக்குவும் சிறுமியின் தாயும் குறித்த சிறுமியிடம் கூறியுள்ளனர்.

எனினும், சிறுமி தனது பெரியம்மா, மற்றும் தகப்பனிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

குறித்த தாய்க்கு 3 குழந்தைகள் உள்ளனர். நீண்டகாலமாக இப் பிக்குவுடன் தகாத உறவு உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply