நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய போது அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தவர் பூஜா தத்லானி.

கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் பி.ஏ.வாக இருக்கும் பூஜா, கிட்டத்தட்ட ஷாருக்கானின் குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வருகிறார்.

ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பிடிபட்ட போது அவரை விடுவிக்க பூஜாதான் முன்னணியில் நின்று பல முயற்சிகளை மேற்கொண்டார்.

ஷாருக்கானுடன் பூஜா

ஆர்யன் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கண்கலங்கி நின்றார். அப்போதுதான் அவருக்கும் ஷாருக் குடும்பத்துக்கும் எத்தனை ஆத்மார்த்தமான நெருங்கிய உறவு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரிய வந்தது.

ஷாருக்கானின் படப்பிடிப்பு தேதிகளைக் கவனித்துக்கொள்வது, அவர் எங்கு யாரை எப்போது சந்திக்கவேண்டும் என்ற விவரங்களையும் பூஜாதான் கவனித்துக்கொள்கிறார்.

அதோடு தொடர் தோல்விகள், படமே ரிலீஸாகாத நான்கு வருடங்கள் என ஷாருக்கானின் பல கஷ்டமான நேரங்களிலும் அவருடன் ஆதரவாக நின்றிருக்கிறார்.

ஷாருக்கான் எங்குச் சென்றாலும் அவருடன் பூஜாவும் செல்வது வழக்கம். அவரின் ரெட் சில்லீஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பணிகளையும் பூஜாதான் கவனித்துக்கொள்கிறார்.

மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ள பூஜா கடந்த 2008ம் ஆண்டு தொழிலதிபர் ஹிதேஷ் குர்னானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

40 வயதாகும் பூஜாவிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 2012ம் ஆண்டு ஷாருக்கானிடம் வேலைக்குச் சேர்ந்த பூஜா, இப்போது ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

சொந்தமாக மெர்சிடிஸ் கார் வைத்திருக்கும் பூஜாவிற்குச் சொத்து மட்டும் ரூ.50 கோடி வரை இருக்கிறது. ஷாருக்கான் கூப்பிட்டால் உடனே வரவேண்டும் என்பதற்காக பூஜா தனது வீட்டை பாந்த்ராவிற்கு மாற்றிக்கொண்டுள்ளார்.

அந்த வீட்டின் உள்கட்டமைப்பு வேலைகளை ஷாருக்கானின் மனைவி கெளரி கான்தான் செய்து கொடுத்தார்.
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Share.
Leave A Reply