♠ ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜப்பான்’.

♠ அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி – ஜப்பான் கார்த்தி – ஜப்பான் தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜப்பான் கார்த்தி – ஜப்பான்

இந்நிலையில் கார்த்தி பிறந்தநாளான இன்று ரசிக்ரகளுக்காக ஜப்பான் படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply