பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீட்டுக் கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்விப்பயிலும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் சனிக்கிழமை(27) மாலை விழுந்துள்ளார்.
சிறுமியை காணாத நிலை தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது. சிறுமி உடனடியாக மீட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.