இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கே.ஜோ ர்ஜ் (65) என்ற பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பயணி உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.