தனியாகச் செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் குழுவைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர்களில் என்றும் அவர்களிடமிருந்து ஓட்டோக்கள் இரண்டும் களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இவர்கள், களுத்துறை, பன்விலாஹேனவத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றனர்.

இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தேக நபர்கள் ஐவரும் வீதியில் சென்றுக்கொண்டுக்கும் பெண்களின் முகங்களில் மிளகாய்த்தூளை வீசி அவர்களைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடிப்போர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply