10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா சதொச கடைகளில் இன்று (9) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ரூ.60,

பயறு கிலோ கிராம் ரூ.325,

செம்பருப்பு கிலோ கிராம் ரூ.15,

சிவப்பு அரிசி கிலோ கிராம் ரூ.15,

நெத்தலை (தாய்லாந்து ) கிலோ கிரா ரூ.10,

கோதுமை மா கிலோ கிராம் ரூ.10,

சோயா மீட் கிலோ கிராம் ரூ.10.

சிவப்பு கெக்குலு அரிசி கிலோ கிராம் ரூ.06

கொண்டைக்கடலை கிலோ கிராம் ரூ.05

வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.4

குறைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி,

காய்ந்த மிளகாய் 1,290 ரூபாவாகவும்,

பச்சைப்பயறு 1,225 ரூபாவாகவும்,

சிகப்பு பருப்பு 299 ரூபாவாகவும்,

நெத்தலி (தாய்லாந்து) 1,140 ரூபாவாகவும்,

கோதுமை மா 200 ரூபாவாகவும்,

சோயா மீட் 100 ரூபாவாகவும்

சிவப்பு அரிசி 139 ரூபாவுக்கும்,

கொண்டைக்கடலை 540 ரூபாவுக்கும்,

வெள்ளை சீனி 225 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்படும்

Share.
Leave A Reply