ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (11) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் 45 வயதுடைய தளவாயை சேர்ந்த தங்கராசா விஜயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

விசாரணைகளின் பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply