கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானது கடந்த யுத்த காலத்தின் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் காணப்பட்டது.

ஆனால்,  தற்போ அதன் நிலை வேறு. 2009 ஆண்டுக்குப்  பின்னர் அந்தக் கல்லூரிக்கு நல்ல காலம் உதயமானது.

இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதுடன் உயர் நிலை பதவிகளை  அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று  மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின்  முதல் பெண் மருத்துவராக  பதவி நிலையை அடைந்துள்ளார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை (10) ஹர்ஷி என்ற இந்தப் பெண்   தனது வைத்திய தொழிலை ஆரம்பித்துள்ளார் என்ற செய்தியும் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply