குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வெளியாகி வருகிறது.

அதில் சில வீடியோக்கள் வைரலாக பரவும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவும் ஒரு வீடியோவில் 1½ வயது குழந்தை தனது சகோதரரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் அவிரா என்ற சிறுமி தனது சகோதரர் விஹான்னிடம் ‘பையா மன்னிக்கவும்’ என்று திரும்ப திரும்ப கூறுவதை காணமுடிகிறது.

ஆனால் அந்த குழந்தையிடம் எதற்காக அவரது சகோதரர் கோபம் அடைந்தார் என்பது தெரியவில்லை.

குழந்தை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட போதிலும், அதனை அவளது சகோதரர் பொருட்படுத்தாதை போன்று காட்சி உள்ளது.

இதனை குழந்தையின் தாய் சுமன் சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்,

Share.
Leave A Reply