மாத்தறை, ஊருபொக்க – தொலமுல்ல பிரதேசத்தில், ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்தபோதே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியை 26 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.