கதிர்காமத்திற்கு யால சரணாலயத்தின் ஊடாக பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் குழுவில் வயோதிபப் பெண் ஒருவர் காட்டு யானையினால் மிதித்து நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மாதவிபுரத்தைச் சேர்ந்த நீலகம்மா இராசதுரை (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் இருந்து பாதயாத்திரையாக தனது கணவர் மற்றும் உறவினர்கள் உட்பட யாத்ரீகர்கள் குழுவுடன் வந்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பாளர்களினால் அவரது சடலம் தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கதிர்காமம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.