லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவியை உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கொந்தம் தேஜஸ்வினி என்பவரே லண்டனில் செய்யாய்க்கிழமை கத்திக்குத்துக்கு இலக்கானவர்.தேஜஸ்வினி சம்பவயிடத்திலேயே பலியானதாக லண்டன் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு 28 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர் தெரிவிக்கையில், தேஜஸ்வினி மற்றும் நண்பர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அந்த பிரேசில் நபர் சில நாட்களுக்கு முன்னர் தான் குடியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply