இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்கூட்டி மீது நிற்கிறார். சேலை அணிந்து கொண்டு பெண் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் விளிம்பில் நின்று தலைகீழாக ‘பல்டி’ அடிக்கிறார்.
சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. காரணம் பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக சிலர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக்கி வருகிறார்கள்.
Powered By VDO.AI அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்கூட்டி மீது நிற்கிறார். சேலை அணிந்து கொண்டு அந்த பெண் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் விளிம்பில் நின்று தலைகீழாக ‘பல்டி’ அடிக்கிறார்.
வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். மேலும் இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சிலர் அந்த பெண்ணின் சாகசத்தை பாராட்டியும், சிலர் இது எல்லாம் தேவையா? இவ்வாறு ரிஸ்க் எடுத்து என்ன சாதிக்க போகிறார்கள்? எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.