பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவன் பல்கலைக்கழக அக்பர் விடுதியின் மூன்றாவது மாடி அறையொன்றில் உள்ள குளியலறையிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

22 வயதுடைய நற்குணராசா குகதீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த மாணவருடன் மேலும் மூன்று மாணவர்கள் விடுதியில் உள்ள அறையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டதுடன் அவர்களில் மூவர் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பல்கலைக்கழக மாணவன், யாழ். வடமராட்சி அல்வாய் மாலிசந்தி பகுதியை சேர்ந்தவராவார். வரணி மத்திய கல்லூரியின் மிகவும் திறமையான பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டி, பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கடந்த ஆண்டு உள்நுழைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பேராதனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply