தனுஷ் பட நடிகை பட நடிகை சோனம் கபூர் ( Sonam Kapoor ) பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு ஆனந்த் அஹூஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட ஆனந்த் அஹூஜா-வை திருமணம் செய்து கொண்டார் நடிகை சோனம் கபூர்.

இவர்களுடைய திருமணத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் பணம் செலவு செய்யப்பட்டது என இவருடைய திருமணம் நடந்த கையோடு தகவல்கள் வெளியாகின.

பாலிவுட் நடிகையான சோனம் கபூர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் சோனம் கபூர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் சில விவகாரமான கேள்விகள் எழுப்பப்பட்டது.அதில் உங்களுடைய படுக்கை அறையில் நீங்கள் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது அவர் கூறியதாவது, படுக்கையறை என்பது ஓய்வு எடுக்க கூடிய அறை என்பதுதான் உண்மை.

அப்படி ஓய்வு எடுக்கும் வரையில் நம்மை பிசியாக வைத்துக் கொள்ளும் கைபேசிகளை உள்ளே அனுமதிக்க கூடாது. எங்களுடைய படுக்கையறையில் நாங்கள் கைபேசிகளை அனுமதிப்பதில்லை.

மட்டுமில்லாமல் கைபேசிகள் மூலம் நாம் பேசக்கூடிய விஷயங்கள் நாம் தேடக்கூடிய விஷயங்கள் குறித்த தகவல்கள் திருடப்படுகின்றன.

அதுவும் நேர்மையான முறையில் அந்த தகவல்கள் நம்மிடமிருந்து பெறப்படுகின்றன.நம்முடைய அனுமதியுடனே பெறப்படுகின்றன என்பதுதான் இதில் வேடிக்கை.

அதனை பலரும் தற்போது உணர்ந்து வருகிறார்கள். எனவே நாங்கள் எங்களுடைய படுக்கையறையில் கைப்பேசிகளை அனுமதிப்பதில்லை என கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்தும் மனம் திறந்துள்ளார் அம்மணி.

இந்த சம்பவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சோனம் கபூர் தனக்கு 13 வயது இருக்கும் போது மும்பையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு, தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.

இடைவேளையின் போது ஸ்னாக்ஸ் வாங்குவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கவே, அதனை பயன்படுத்திக் கொண்ட ஒருவர், 13 வயதே ஆன பெண் என்றும் பார்க்காமல் தன்னுடைய வக்கிர புத்தியை காட்டும் விதமாக சோனம் கபூரின் மார்பகங்களை பிடித்து கசக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சோனம் கபூர் கை, கால்கள் எல்லாம் நடுக்கம் எடுத்து அங்கேயே அழ துவங்கியுள்ளார்.

இந்த தகவலை யாரிடமும் கூறாமல் இருந்த நிலையில், தனக்குத் தானே தவறிழைத்தது போன்ற மனநிலையை கொண்டிருந்ததாகவும் சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply