வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் ஓட்டோவில் பயணித்துள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ அருகில் இருந்த பாலத்தினுள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply